பதிவு செய்த நாள்
02
நவ
2018
12:11
திருப்போரூர்: அனுமந்தபுரம் அகோர வீரபத்ர சுவாமி கோவில் ராஜகோபுரத்திற்கு, வண்ணம் தீட்டும் பணி துவங்கியுள்ளது. திருப்போரூர் அடுத்த அனுமந்தபுரத்தில், திருவிளையாடல் புராண சிறப்பு கோவிலாக அகோர வீரபத்ரர் கோவில் விளங்குகிறது.
அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ள இக்கோவில், செவ்வாய் பரிகார தலமாக விளங்கு கிறது. இங்குள்ள வீரபத்ரரை வழிபட, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலிருந்து பவுர்ணமி, அமாவாசை நாளில் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். பக்தர் முயற்சியில், ராஜகோபுரம் கட்டும் பணி, கடந்தாண்டு துவங்கியது.
பல லட்சம் மதிப்பில், இப்பணி நிறைவடைந்து, அழகிய வேலைபாடு களுடன் சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, ஐந்து நிலை ராஜகோபுரத்திற்கு, வண்ணம் தீட்டும் பணி
விறுவறுப்புடன் நடக்கிறது. அடுத்தாண்டு கும்பாபிஷேகத்திற்கு ஏற்ப, மற்ற திருப்பணிகளும் நடக்கவிருப்பதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.