உத்தமபாளையம்: உத்தமபாளையம் நகரின் மையப்பகுதியில் யோகநரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்தது. சமீபத்தில் கும்பாபி ஷேகம் நடந்தது. இங்கு பெருமாளுக்கு வலது புறம் ஆண்டாளுக்கு கோபுரத்துடன் கூடிய தனி சன்னதி, அர்த்த மண்டபம், கருவறை அமைக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பாகும்.
தடை நீங்கி திருமணம் நடக்க வேண்டும் என வேண்டி வரும் பக்தர்களுக்கு இரண்டு கிளிகள் ,மாலை எடுத்து கொடுப்பது, மங்கள வாத்தியம் முழங்குவது போல சிற்பங்கள் அமைக்கப் பட்டுள்ளது. இதனை உத்தமபாளையத்தை சேர்ந்த பழனிவேல்ராஜன் தந்தை பாலு நினைவாக நடத்தி வரும் திருமலை கற்பகா அறக்கட்டளை சார்பில் கட்டியுள்ளார்.அவர் கூறுகையில், ஆண்டாள் மீது மிகுந்த பக்தி உண்டு.
ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று வழிபட முடியாதஇப்பகுதி பக்தர்கள் தரிசிக்க இந்த சன்னதி கட்டி னேன். அங்குள்ள மல்லிப்பட்டியில் விக்ரகம் செய்யப்பட்டது. மூன்றேகால் அடி உயரம் கொண்ட ஆண்டாளை பார்த்தாலே பக்தியில் கண்கள் குளமாகி விடும். வேண்டியது நடக் கிறது, என்றார். மேல் விபரங்களுக்கு 98436 33358