பதிவு செய்த நாள்
11
பிப்
2012
11:02
குஜிலியம்பாறை:வேடசந்தூர் வெம்பூர் கிராமம் தங்கச்சியம்மாபட்டி தேவி காளியம்மன் கோயிலில், நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பிரசித்திபெற்ற இக்கோயிலில், 12 ஆண்களுக்கு பின், கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. 18 கிராம மக்கள் பங்கேற்கும் இக்கோயில் விழா, நேற்று காலை விநாயகர் வழிபாடு, முதற்கால பூஜையுடன் துவங்கியது.இன்று, காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, இரவு 7 மணிக்கு வாணவேடிக்கையும் நடைபெறும். நாளை காலை 9.45 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். ரெட்டியார்சத்திரம் மோகன சுந்தரபட்டர் தலைமையில், யாக சாலை பூஜைகள் நடக்கின்றன.அமைச்சர் விஸ்வநாதன், தம்பித்துரை எம்.பி., பழனிச்சாமி எம்.எல்.ஏ., பங்கேற்க உள்ளனர். ஏற்பாடுகளை, கோயில் விழாக்குழு, நாட்டாண்மை ஜெயக்குமார் செய்கின்றனர்.