பதிவு செய்த நாள்
06
நவ
2018
02:11
தீபாவளி பண்டிகையையொட்டி, அனைத்து கோவில்களிலும், காலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பொதுமக்கள் புத்தாடையுடன் சென்று ஸ்வாமியை வழிபட்டனர். தீபாவளி பண்டிகை என்பதால், அதிகாலையில் எழுந்த மக்கள் எண்ணை தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்களது இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டதை காண முடிந்தது. ஒருவருக்கொருவர் ஜாதி, மத பேதமின்றி இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
சேலத்தில், கோட்டை மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில், சுகவனேஸ்வரர் கோவில், எல்லைப்பிடாரி அம்மன் கோவில், வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்டவற்றில், பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. தலை தீபாவளி கொண்டாடும், புதுமணத் தம்பதிகள் கோவிலில் குவிந்தனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி, திருப்பூர் கோட்டை மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கோவை வைசியாள் வீதியிலுள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில தீபாவளி்பட்டிகையையொட்டி லட்டு அலங்கரத்தில் அருள்பாலித்தார். தீபாவளி பண்டிகையையொட்டி கோவை ஈச்சனாரி விநாயகர், கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திர் முப்பெரும் தேவிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.