க.பரமத்தி: க.பரமத்தி நஞ்சைக்காளிக்குறிச்சி ஸ்ரீ குங்கு மாகாளியம்மன் கோவிலில் இன்று (11 ம் தேதி) மாலை 6 மணிக்கு ஸ்ரீ நவசண்டி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீ நவசண்டி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள், யோகன் 64 உள்ளிட்ட பூஜைகளை லலிதா லிமாஜத் மஹா வித்தியசாகர் சரஸ்வதி ஸ்வாமிகள் தலைமையில் நடக்கிறது. விழாவில் கரூர், கோ வை, திருச்சி, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர். விழாவை முன்னிட்டு இன் று காலை 11 மணி முதல் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை புஞ்சைக்காளிக்குறிச்சி பொதுமக்கள் செய்துள்ளனர்.