பதிவு செய்த நாள்
08
நவ
2018
12:11
அவிநாசி: அவிநாசி, செங்காட்டிலுள்ள காமாட்சியம்மன் உடனமர் ஏகாம்பரநாதர், ராக்காத் தாள் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, தீர்த்தக் குட ஊர்வலம், நேற்று (நவம்., 7ல்) நடந்தது.
அவிநாசி, செங்காடு, வ.உ.சி., திடலில் உள்ள, காமாட்சியம்மன் உடனமர் ஏகாம்பரநாதர், ராக் காத்தாள் கோயில் திருப்பணி நிறைவுற்று, நாளை (நவம்., 9ல்) கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதற்காக, நேற்று (நவம்., 7ல்) காலை, அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து, நூற்றுக் கணக்கான பெண்கள் தீர்த்த குடம், முளைப்பாலிகை எடுத்து அவிநாசியின் முக்கிய வீதி வழியாக கோயிலை சென்றடைந்தனர். முன்னதாக, குதிரை நாட்டியம் மற்றும் வான வேடிக்கை நிகழ்த்தப்பட்டது.
இன்று (நவம்., 8ல்) கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் திருவிளக்கு பூஜை, சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. நாளை (நவம்., 9ல்) காலை 8:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.