பதிவு செய்த நாள்
08
நவ
2018
02:11
சேலம்: சேலத்தில், நேற்று (நவம்., 7ல்) ஏராளமான பெண்கள், கேதார கவுரி விரதம் மேற்கொண்டனர். சிவனை பிரிந்திருந்த அம்பாள், புரட்டாசி மாத சுக்கில பட்ச தசமி தொடங்கி, ஐப்பசி அமாவாசை வரை, 21 நாட்கள் கேதார கவுரி விரதமிருந்து, பிரியாமல் இருக்கும் வரம் வாங்கியதாக ஐதீகம். இந்த விரதத்தை குடும்ப பெண்கள், கடைபிடிப்பதால், கணவனை பிரியாமல் இருப்பதுடன், நிறைசெல்வம், நீண்ட ஆயுள் உள்ளிட்டவை வரமாக கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இதில், 21 நாட்கள் தொடர்ந்து கடைபிடிக்காதவர்கள் கூட, விரதத்தின் முக்கிய தினமான, ஐப்பசி அமாவாசையில், விரதம் இருந்து வழிபாடு நடத்துகின்றனர்.
நேற்று (நவம்., 7ல்) சேலத்தில் பெரும்பாலான வீடுகளில், திருமணமான பெண்கள், சுவாமி யை பிரதிஷ்டை செய்து, 21 வாழைப்பழம், 21 பாக்கு, 21 மஞ்சள், 21 அதிரசம் மற்றும் நோன்பு கயிறு ஆகியவற்றை வைத்து, வழிபட்டனர். வீடுகளில் வழிபாடு நடத்த முடியாதவர் கள், கோவிலில் நோன்பு கயிறு வைத்து, பூஜை செய்து, கட்டிக்கொண்டனர். அடுத்தடுத்த தலை முறையும், இப்பூஜையில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக, மூத்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித் தனர்.