திருக்கோவிலுார் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2018 04:11
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி சிறப்பு பூஜை நடந்தது. திருக்கோவிலுார் அடுத்த அந்திலி‚ தென்பெண்ணை ஆற்றை ஒட்டி‚ பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சுவாதி சிறப்பு பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அர்ச்சனை‚ மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.