பதிவு செய்த நாள்
09
நவ
2018
02:11
புதுச்சேரி:சாரம் சுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் நேற்று நவம் 8ல்., துவங்கியது.சாரத்தில், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு கந்த சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவ விழா நேற்று (நவம்., 8ல்) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலையில், சுவாமிக்கு மகா அபிஷேகமும், இரவில், அன்ன வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடந்தது. முன்னதாக, யாகசாலை பூஜைகள் துவங்கியது. வரும் 13ம் தேதியன்று, சூரசம்ஹாரமும், 14ம் தேதியன்று, திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. வரும் 18ம் தேதியன்று, விடையாத்தி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுவினர், அர்ச்சகர்கள், விழாக் குழுவினர் செய்துள்ளனர்.