பதிவு செய்த நாள்
09
நவ
2018
03:11
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ரெங்கநாச்சியார் (தாயார்) ஊஞ்சல் உற்சவம் நாளை (நவம்., 10ல்) துவங்கி, 16ம் தேதி வரை நடக்கிறது. ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு, வரும், 10 முதல், 15 வரை தினமும் மாலையில், ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, ஊஞ்சல் மண்டபம் வருவார். அங்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். தாயார், இரவு, 8:45 மணிக்கு மீண்டும் மூலஸ்தானம் புறப்பட்டுச் செல்வார். வரும், 16 வரை, விழா நாளில் சன்னதியில் அமைக்கப்பட்ட ஊஞ்சலில் தாயார் எழுந்தருளுவார்.