பதிவு செய்த நாள்
13
பிப்
2012
10:02
பழநி :எடப்பாடி பருவதராஜகுல மகாஜனத்தினர் பழநி மலைகோயிலில் 15 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். எடப்பாடி பருவதராஜகுல மகாஜனத்தினர் 352 வது ஆண்டாக பழநிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். கடந்த பிப்.,4 ல் வெள்ளாண்டி வலசில் இருந்து தலைமைக்காவடி முதலில் புறப்பட்டது. சேலம் மாவட்டம் அம்மாபட்டி, எடப்பாடி, சின்னசீராகாப்படி, பரமத்தி வேலூர், கவனம்பட்டி, சின்னமணலி, கா.புதூர், புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் புறப்பட்டு பழைய எடப்பாடியை வந்தடைந்தனர். ங்கு தைப்பூச பூஜை நடந்தது. பிப்., 9 ல் ஈரோடு காவேரி ஆற்றில் தீர்த்தக்காவடி எடுத்து சென்னிமலை, காங்கேயம், தாராபுரம் வழியாக பழநியை அடைவர். சாயரட்சை பூஜையில் இவர்களது அபிஷேகம் நடைபெறும். இவர்களுக்கு பிரசாதமாக வழங்க 4 டன் மலைவாழைப்பழம், 6 ஆயிரம் கிலோ சர்க்கரை, ஆயிரம் கிலோ பேரிச்சை, கற்கண்டு 300 கிலோ, நெய் 120 கிலோ, தேன் 120 கிலோ, ஏலக்காய் 10 கிலோ கொண்டு 15 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி மலைகோயில் வெளிப்பிரகாரத்தில் நடந்து வருகிறது. இரவு மலைகோயிலில் தங்கி பிரசாதங்கள் வழங்கப்படும்.