செஞ்சி :மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தேர்கட்டும் பணி நடந்து வருகிறது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழா இம்மாதம் 20ம்தேதி கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய விழாக்களான மயானக்கொள்ளை 21ம் தேதியும் தீமிதி விழா 24ம் தேதியும், திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி 26ம் தேதியும் நடக்க உள்ளது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலின் பாரம்பரியப்படி ஒவ்வொரு ஆண்டும் பச்சை மரங்களை கொண்டு புதிதாக தேர் அமைத்து விழா நடந்து வருகிறது. இதில் தேர் சக்கரம், அம்மன் பீடம் , கலசம் ஆகியன நிலையானவையாக வைத்துள்ளனர். இந்தாண்டு தேர்கட்டும் பணி கடந்த 9ம் தேதி துவங்கியது. கிருஷ்ணன் ஆச்சாரி தலைமையிலான குழுவினர் இப்பணிகளை செய்து வருகின்றனர். இவர்கள் பனை, காட்டுவா, இலுப்பை, புளியமரங்களை கொண்டு புதிய தேரை வடிவமைத்து வருகின்றனர். இப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேசன் மற்றும் அறங்காவலர் குழுவினர் மேற்பார்வை செய்து வருகின்றனர்.