பதிவு செய்த நாள்
10
நவ
2018
11:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவை யொட்டி, தினமும் இரு வேளை சண்முகார்ச்சனை நடக்கிறது.
நவ., 13 வரை காலை 11 மணி, மாலை 5 மணிக்கு சண்முகார்ச்சனை நடக்கிறது. தினமும் ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு 16 வகையான திரவிய அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரம் நடக்கிறது. சண்முகரின் ஆறுமுகங்களுக்கும் ஆறு சிவாச்சார்யார்களால் சகஸரநாம அர்ச்சனை முடிந்து, சமகாலத்தில் தீபாராதனை நடக்கிறது. சர்க்கரை பொங்கல், புளி, எழுமிச்சை, தேங்காய், தயிர் சாதம், வரை படைக்கப்படுகிறது.