பதிவு செய்த நாள்
10
நவ
2018
12:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், ராஜ கோபுரம் பிரதான வழியை மறித்து, அன்னதானம் வழங்குவதால், பக்தர்கள் கோவிலுக்குள், எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது.
தொண்டை நாட்டு திருமுறை திருத்தலங்கள், 32ல், காஞ்சிபுரத்தில் உள்ள, ஏகாம்பரநாதர் கோவில், 18வது திருத்தலமாக விளங்குகிறது.இக்கோவிலுக்கு உள்ளூர், வெளியூர்
பக்தர்களும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் என, தினமும் ஏராளமானோர் வந்து செல் கின்றனர்.
இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களில் சிலர், தங்களது நேர்த்திக்கடனாக ராஜ கோபுரத்தின் நுழைவாயில் அருகே அன்னதானம் வழங்குகின்றனர்.இதனால், அன்னதானம் வாங்க வரிசையில் நிற்கும் பக்தர்கள், நுழைவாயில் பாதையை மறித்து, நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.இதனால், கோவிலில் சுவாமியை
தரிசிக்க உள்ளே செல்லவும், வெளியேறவும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.கோவிலுக்கு வரும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது புண்ணியமான செயல் என்றாலும், பிற பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல், அன்னதானம் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.