பதிவு செய்த நாள்
10
நவ
2018
12:11
திருத்தணி: சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை, நகராட்சி நிர்வாகம் அகற்றாததால், கோவில் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.திருத்தணி நகராட்சி, 13வது வார்டு சன்னதி தெருவில், முருகன் கோவில் நிர்வாகம், 10 கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளது. இந்த கடைகளை, ஆண் டுக்கு ஒரு முறை ஏலம் விடுகிறது.ஒவ்வொரு கடைக்கும், 30 ஆயிரம் வீதம் மொத்தம், 10 கடைகளுக்கு, 3 லட்சம் ரூபாய், ஆண்டு வருவாய்
கிடைக்கிறது.இந்நிலையில், நடப்பாண்டிற்கான ஏலம், ஜூன் மாதம் நடந்தது. பத்து கடைக் காரர்களும், ஏலத் தொகை அதிகம் எனக்கூறி, ஏலம் எடுக்கவில்லை.இருப்பினும், மூன்று கடைகள் மட்டும் ஏலம் போன நிலையில், மற்ற கடைகள் பூட்டப்பட்டுள்ளன.ஆனால் கடைக்காரர்கள், பூட்டிய கடைகள் முன், சன்னதி தெருவை ஆக்கிரமித்து, கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர்.இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், நகராட்சி நிர்வாகம் அலட்சி யம் காட்டுகிறது. இதனால், கோவில் நிர்வாகத்திற்கு இழப்பீடு ஏற்படுகிறது.நகராட்சி நிர்வாகம்
ஆக்கிரமிப்புகளை அகற்றினால், கடைக்காரர்கள் வேறு வழியின்றி, கோவில் கடைகளை ஏலம் எடுப்பர் என, கோவில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.