பதிவு செய்த நாள்
11
நவ
2018
05:11
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், யானை இல்லாமல், முதன்முறையாக தீப திருவிழா நடப்பதால், பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு, கடந்த, 22 ஆண்டுகளாக, கார்த்திகை தீப திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களில், சுவாமி மாட வீதி உலாவின்போது, முன் சென்று வழி நடத்தியது. திருவண்ணாமலை மக்களிடையே, குடும்ப உறுப்பினர் போல், அனைவரும் மனதில் நெருங்கிய இடத்தை ருக்கு பிடித்திருந்தது. கடந்த மார்ச், 22ல், உடல் நலக்குறைவால், ருக்கு இறந்தது. வரும், 14ல் தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலை, 10:00 மணிக்கு பஞ்சமூர்த்தி வெள்ளி விமானங்கள் வீதி உலா நடக்கிறது. முதன்முறையாக, இந்த ஆண்டு யானை இல்லாமல், தீ ப திருவிழாவும், சுவாமிகள் வீதி உலாவும் நடக்க உள்ளது. இது, பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.