பதிவு செய்த நாள்
12
நவ
2018
12:11
புதுச்சேரி:புதுச்சேரியில், கிருஷ்ணபிரேமிக பஜனை மண்டலி சார்பில், நான்கு கோவில்களில், உஞ்சவ்ருத்தி நாமசங்கீர்த்தனம் நடந்தது.திருவிசலூர் ஸ்ரீதரவேங்கடேச அய்யாவாள் கங்கா வதரண மகோத்சவம், வரும் 27ம் தேதி அன்னதானம், பஜனை, சங்கீத கச்சேரியுடன் துவங்கி, டிசம்பர் 6ம் தேதி கங்கா ஸ்நானத்துடன் நடைபெறுகிறது. அதையொட்டி, புதுச்சேரியில் நேற்று (நவம்., 11ல்) உஞ்சவ்ருத்தி நாமசங்கீர்த்தனம் நடந்தது.ரெயின்போ நகர் சுமூக விநாயகர் கோவி லில் காலை 7:15 மணி முதல் 8:00 வரையும், பிருந்தாவனம் சதானந்த விநாயகர் கோவிலில் காலை 8:15 முதல் 9:00 வரையும், குறிஞ்சி நகர் வலம்புரி ஞானவிநாயகர் கோவிலில் காலை 9:15 மணி முதல் 10:15 வரையும், எல்லைபிள்ளைச்சாவடி சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் காலை 10:30 மணி முதல் பகல் 12:30 வரையும் உஞ்சவ்ருத்தி நாமசங்கீர்த்தனம் நடந்தது. புதுச்சேரி கிருஷ்ணபிரேமிக பஜனை மண்டலியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.