புதுச்சேரி வீராம்பட்டினம் கோவிலுக்கு ரூ. 80 லட்சத்தில் புதிய தேர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2018 12:11
புதுச்சேரி:வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலுக்கு, ரூ. 80 லட்சம் செலவில், புதிய தேர் செய்யும் பணியை, முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார்.புதுச்சேரி அடுத்த வீராம் பட்டினத்தில் பிரசித்திப்பெற்ற செங்கழுநீரம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழாவின்போது நடக்கும் தேரோட்டம் மிக சிறப்பானது. கவர்னர் மற்றும் முதல்வர் வடம்பிடித்து துவக்கி வைப்பர்.
புதுச்சேரி மட்டுமின்றி தமிழக பகுதிகளிலும் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பர்.வீராம்பட்டினம் கோவில் தேர் பழுதடைந்ததையடுத்து, புதிய தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்காக ரூ. 80 லட்சம் செலவில் புதிய தேர் செய்யும் பணி துவங்கியுள்ளது. நேற்று (நவம்., 11ல்) காலை நடந்த பூஜையில், முதல்வர் நாராயணாமி பங்கேற்று, பணியை துவக்கி வைத்தார்.
ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., இந்து அறநிலையத்துறை செயலர் சுந்தரவடிவேலு, அறநிலையத் துறை ஆணையர் சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காங்., தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.