பதிவு செய்த நாள்
12
நவ
2018
03:11
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த, எம்.பி., நாச்சிமுத்துபுரம் நெசவாளர் காலனியில், ராஜகணபதி கோவிலில், பாலாலயம் செய்யப்பட்டது. கோபுரத்துக்கு வர்ணம் தீட்டப்பட்டு, மண்டபங்கள் புதுபிக்கப்பட்டது. புதியதாக யோக தட்சிணாமூர்த்தி, துர்கை, நவகிரக சிலைகள் அமைக்கப்பட்டன. திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேகம் நேற்று 11ல், நடந்தது. முன்னதாக கும்பாபிஷேக நிகழ்வுகள், நேற்று முன்தினம் 10 ல்,தொடங்கின. மூன்று கால யாகசாலை பூஜைகள் நடந்த நிலையில், நேற்று (நவம்., 11ல்) காலை, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.