பதிவு செய்த நாள்
12
நவ
2018
03:11
கோத்தகிரி:கோத்தகிரி திம்பட்டி கிராமத்திலுள்ள மாதேஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபி ஷேகம் நடந்தது.விழாவை ஒட்டி, கடந்த 7ம் தேதி காலை, 10:30 மணிக்கு, எட்டூர் உஜ்ஜனி காளிய ம்மன் கோவிலில் இருந்து, புனித நீர் கொண்டுவரும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று (நவம்., 11ல்) காலை 7:00 மணிக்கு, கோவில் பூசாரி மற்றும் கிராம மக்கள் முன்னிலை யில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, மகா அபிஷேகம்
மற்றும் மகா தீபாராதனை நடந்தன. விழாவில், பஜனை, ஆடல் பாடல் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.