பதிவு செய்த நாள்
12
நவ
2018
03:11
திருச்சி: காவிரி ரத யாத்திரை குழுவுக்கு, இந்து அமைப்பினர் சார்பில், திருச்சியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் இருந்து கடந்த வாரம், அகில பாரதிய துறவியர்
சங்கம் மற்றும் காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை புறப்பட்டது. காவிரிக் கரையோரப் பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ரத யாத்திரை, நேற்று முன் தினம் (நவம்., 10ல்) திருச்சிக்கு வந்தது.
15 துறவியர்களுடன் வந்த ரத யாத்திரைக்கு, இந்து அமைப்பினர் சார்பில் வரவேற்பளிக்கப் பட்டது. தொடர்ந்து, ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் படித்துறைக்கு சென்ற யாத்திரை குழுவினர், சிறப்பு பூஜை நடத்தி காவிரி தாய்க்கு ஆரத்தி எடுத்தனர். தொடர்ந்து, காவிரியின் புனிதத்தை காக்கவும், தூய்மைப்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தஞ்சை மாவட்டம்,
கல்லணைக்கு ரத யாத்திரை குழுவினர் புறப்பட்டு சென்றனர்.