பதிவு செய்த நாள்
12
நவ
2018
03:11
* நவம்பர் 10 ஐப்பசி 24: திரிலோசன கவுரி விரதம், சிக்கல் சிங்கார வேலர் மோகன அவதாரம், நாகை மாவட்டம் இந்தளூர் பரிமள ரங்கநாதர் சேஷ வாகனம், மாயவரம் கவுரி மாயூரநாதர் கற்பக காமதேனு வாகனம், ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் தேர்.
*நவம்பர் 11 ஐப்பசி 25: முகூர்த்த நாள், பிள்ளை லோகாச்சாரியார் திருநட்சத்திரம், நாக சதுர்த்தி, தூர்வா கணபதி விரதம், ஐயடிகள் காடவர் கோன் குருபூஜை, மாயவரம் மாயூரநாதர் ரிஷப வாகனம், குமாரவயலூர் முருகன் கஜமுகாசுரனுக்கு வாழ்வு அருளல், சிக்கல் சிங்கார வேலர் வேணுகோபாலர் திருக்கோலம், இந்தளூர் பரிமளரங்கநாதர் கருடவாகனம்.
* நவம்பர் 12 ஐப்பசி 26: திருக்குருகை பிரான், சேனை முதலியார் திருநட்சத்திரம், சிக்கல் சிங்கார வேலர் பார்வதியிடம் வேல் வாங்குதல், குமாரவயலூர் முருகன் வெள்ளிமயில் வாகனம், மாயவரம் மாயூரநாதர் மஞ்சத்தில் பவனி, இந்தளூர் பரிமள ரங்கநாதர் அனுமன் வாகனம்.
* நவம்பர் 13 ஐப்பசி 27: கந்தசஷ்டி விரதம், முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம், சிக்கல் சிங்கார வேலர் இந்திர விமானம், வள்ளியூர் முருகன் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு.
* நவம்பர் 14 ஐப்பசி 28: முகூர்த்த நாள், திருவோண விரதம், பொய்கையாழ்வார் திருநட்சத்திரம், முருகன் கோயில்களில் தெய்வானை திருக்கல்யாணம், சிக்கல் சிங்கார வேலர் வெள்ளிரதம், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கார்த்திகை உற்ஸவம் ஆரம்பம்.
* நவம்பர் 15 ஐப்பசி 29: சிக்கல் சிங்கார வேலர் வள்ளியுடன் இந்திர விமானத்தில் பவனி, திருவண்ணாமலை அண்ணாமலையார் சூரிய பிரபை, சுவாமிமலை, திருப்பரங்குன்றம் முருகன் கோயில்களில் திருக்கார்த்திகை உற்ஸவம் ஆரம்பம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, மாயவரம் மாயூரநாதர் தேர்.
* நவம்பர் 16 ஐப்பசி 30: கடைமுக ஸ்நானம், பூதத்தாழ்வார் திருநட்சத்திரம், மாயவரம் கவுரிநாதர் கடைமுக தீர்த்தம், இந்தளூர் பரிமள ரங்கநாதர் தேர். சுவாமிமலை முருகன் உடும்பு வாகனம், சிக்கல் சிங்காரவேலர் விடையாற்று உற்ஸவம், திருநெல்வேலி நெல்லையப்பர் திருவனந்தல் ஆரம்பம்.