திருப்புவனம்:திருப்புவனம் அருகே வாவியரேந்தல் ஸ்ரீகலிதீர்த்த அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா பத்து ஆண்டுகளுக்கு பின், நாளை (நவம்., 13ல்) நடக்கிறது.
பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் புரவி எடுப்பு திருவிழா நடத்தப்படும். பத்தாண்டுகளுக்கு முன் இருதரப்பினரு க்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் விழா தடைப் பட்டது. பலமுறை சமாதான கூட்டம் நடத்தியும் முடிவு எட்டவில்லை. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இருதரப்பினரையும் இணைந்து திருவிழா நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் நேற்று (நவம்., 11ல்)தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது.
இருதரப்பினரும் இணைந்து விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அவர்கள் நேற்று (நவம்., 11ல்) மாலை அய்யனார் கோயில் முன் பொங்கல் வைத்து வழிபட்டனர். நாளை (நவம்., 13ல்) புரவி எடுப்பு நடக்கிறது.