பதிவு செய்த நாள்
12
நவ
2018
03:11
சிவகங்கை:சிவகங்கையில் பழமையான ஹனுமந்தராய சுவாமி, அனுக்ரஹ ஆஞ்சநேய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தை யொட்டி யாகசாலைகள் அமைத்து நவ., 9 காலை 8:00 மணிக்கு கோபூஜை, கணபதி பூஜை நடந்தன. தொடர்ந்து இரவு 7:30 மணிக்கு ஹோமங்கள், நேற்று (நவம்., 11ல்) காலை 8:00 மணிக்கு சுப்ரபாத சேவை, காலை 11:30 க்கு வேதபாராயணம், துவாரபாலக பூஜை, மாலை 6:00 க்கு ஹோமங்கள் நடந்தன. நேற்று (நவம்., 11ல்) காலை 6:30 மணிக்கு கோ பூஜை,
7:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், 7:30 மணிக்கு வேத பாராயணம், 8:00 மணிக்கு மகா பூர்ணாகுதி நடந்தன.காலை 8:30 மணிக்கு கும்பாபிஷேகம்ம் நடந்தது.
தொடர்ந்து மகா தீபாராதனை, பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் நடந்தன.ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்தனர்.