ருஷ்ய நாட்டு பக்தர்கள் குழு: திருமலையில் சாமி தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2012 11:02
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், ருஷ்ய நாட்டை சேர்ந்த பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீகிருஷ்ணா பக்தி குழுவை சேர்ந்த ஆண், பெண் பக்தர்கள் 104 பேர், நேற்று முன்தினம் திருமலைக்கு வந்தனர். பின்னர் சாமி தரிசனத்துக்கு கோவிலுக்கு வந்த இக்குழுவினர், பக்தி பாடல்கள் பாடியபடி மூலவர் வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தனர். இவர்கள் அனைவரும் சம்பிரதாய முறைப்படி வேட்டி, சேலை அணிந்திருந்தனர். லட்டு பிரசாதங்களையும் இக்குழுவினர் பக்தியுடன் ருசித்து சாப்பிட்டனர். வார விடுமுறையையொட்டி சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில், லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலையில் சாமி தரிசனம் செய்தனர்.