மடப்புரம் கோயில் முன் ஆக்கிரமிப்பு: பக்தர்கள் சிரமம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2012 10:02
திருப்புவனம் : மடப்புரம் காளிகோயில் அருகே காலணி வைப்பு அறைக்கு முன் கடைகள் வைக்கப்பட்டு ஆக்கிரமித்துள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். மடப்புரம் காளிகோயிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிகமாக வருவர்.கோயிலுக்கு முன் பக்தர்கள் காலணிகளை வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மறைத்து கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் பக்தர்கள் காலணிகளை வைக்கமுடியாமல் சிரமப்படுகின்றனர். ஆக்கிரமிப்பாளர்கள் ரோட்டையும் ஆக்கிரமிப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.கோயில் நிர்வாகத்திற்கு எதிராக, ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள், பக்தர்களிடம் பணம் வசூலித்து காலணிகளை பாதுகாக்கின்றனர். இப்பிரச்னையை தீர்க்க கோயில் நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்.