பதிவு செய்த நாள்
14
நவ
2018
01:11
* விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா அனைத்து முருகன் கோயில்களிலும் விமரிசையாக நடந்தது.
முருக பெருமானுக்கு விசேஷமான கந்த சஷ்டி விழா நவ., 8 ல் துவங்கியது. பக்தர்கள் காப்புக் கட்டி விரதமிருந்தனர். மாவட்டத்தில் முக்கிய முருகன் கோயில்களான விருதுநகர்
வாலசுப்பிரமணியசாமி கோயில் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, வீதி உலா நடந்தது. 5 - ம் நாளான நேற்று (நவம்., 13ல்) சூரசம்ஹார விழா நடந்தது.
விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோயில் தேசபந்து மைதானத்தில் வீரபாகு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். வாலசுப்பிரமணிய சுவாமி வெள்ளி மயில்
வாகனத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்தார் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
*சிவகாசி விஸ்வநாதசுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் விழா, 84 ம் ஆண்டு கந்தர் சஷ்டி விழா ஒரு வாரமாக நடந்து வருகிறது. தினமும் மாலை ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. சூரசம்ஹாரம் விழாவில் முருகன் சிறப்பு அலங்காரத்தில் மயில்வாகனத்தில் வந்து அசுரனை வதம் செய்தார். பட்டர் சுப்பிரமணியன் நிகழ்ச்சியை நடத்தினார்.
* வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு சஷ்டி பாராயணத் துடன், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. வெள்ளவிநாயகர் கோயிலிலிருந்து கந்தசஷ்டி விழாக்குழு அமைப்பாளர் கதிரேசன் தலைமையில் திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலால் சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது.மாலையில் முருகபெருமான், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி முத்தலாம்மன் கோயில் திடலில் நடந்தது. பக்தர்கள் அரோகரா கோசத்துடன் முருகபெருமானை வழிபட்டனர்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் முருகபெருமான், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகளை ரகு மற்றும் ரமேஷ்பட்டர் செய்தனர். மாலையில்
சண்முகர் மற்றும் பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு பூஜைகள் நடந்தது. கோயில் ரதவீதியில் சூரபத்மனை சண்முகர் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் அரோகரா கோசத்துடன் தரிசித்தனர்.
* சாத்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சூரசம்காரம் நேற்று (நவம்., 13ல்) மாலை 4:30 மணிக்கு தொடங்கி இரவு 7:00 மணி வரை நடந்தது. நான்கு ரத வீதிகள் வழியாகமயில் வாகனத்தில் வலம்வந்த சுவாமி, சூரனை சம்காரம் செய்தார்.