பதிவு செய்த நாள்
14
நவ
2018
02:11
பழநி: பழநியில் வாழைத்தண்டு, காய்கறி, பழங்களுடன் தயிர் கலந்த கூட்டு நைவேத்யத்துடன் கந்தசஷ்டி விரதம் கடைபிடித்த பக்தர்கள் முடித்தனர்.
கந்தசஷ்டி விழாவிற்காக நவ.,8 முதல் காப்புக்கட்டி 6 நாட்களாக விரதமிருந்த பக்தர்கள் பழநி மலைக்கோயில், திருவாவினன்குடி கோயில்களில் விரதத்தை நிறைவு செய்வதற்காக குழுக்களாக அமர்ந்தனர். அவர்கள் வாழைத்தண்டு, பழங்கள், காய்கறி, தயிர் சேர்த்து பிரசாதம் தயாரித்தனர். மலர் அலங்காரத்துடன் தீபம் ஏற்றி வழிபாடு செய்து, பிரசாதத்தை சுவாமிக்கு நைவேத்யம் செய்தனர்.அதனைசாப்பிட்டு பக்தர்கள் விரதம் முடித்து, மற்றவருக்கும் பிரசாதமாக வழங்கினர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பக்தர் கந்தன் பெரியசாமி கூறுகையில்,""கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் சூரசம்ஹாரத்தன்று வாழைத்தண்டுடன் ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட பழங்கள், தயிர், காய்கறிகளில் படையல் தயாரித்து சுவாமிக்கு படைத்துசஷ்டியை கொண்டாடுகிறோம். சமைக்காத இயற்கையாக பச்சை காய்கறி, பழங்கள், தயிர் மூலம் நைவேத்ய பிரசாதம் தயாரிக்கிறோம்.
சிலர் தண்டு விரதத்துடனும், சிலர் திருக்கல்யாணம் முடிந்தவுடன் கையில் கட்டிய காப்பைக் கழற்றியும் விரதம் முடிக்கின்றனர்” என்றார்.