எட்டயபுரம் கோயிலில் வரும் 20ம் தேதி மகா சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2012 11:02
எட்டயபுரம் : எட்டயபுரம் சமஸ்தானம் எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் வரும் 20ம் தேதி இரவு நான்கு கால சிறப்பு பூஜைகளுடன் மகா சிவராத்திரி விழா நடக்கிறது. எட்டயபுரம் எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் வரும் 20ம் தேதி இரவு 9 மணியளவில் முதல் காலபூஜையுடன் மகா சிவராத்திரி விழா துவங்குகிறது. பஞ்சகவ்யம் முதலான அபிஷேகங்கள், செம்பட்டு சாத்தி புட்பதீபம், பால் பொங்கல் நிவேதனம் நடக்கும். இரவு 10.30 மணிக்கு மேல் இரண்டாம் காலம் (லிங்கோற்பவ காலம்) பஞ்சாமிர்தம் முதலான அபிஷேகங்கள், மஞ்சள்பட்டு சாத்தி நட்சத்திரதீபம், பாயாச அன்னம் நிவேதனம் நடக்கும். இரவு 12 மணிக்கு மேல் மூன்றாம் காலம் பலோதகம் முதலான அபிஷேகம், வெண்பட்டு சாத்தி, ஐந்துமுக தீபம் ஏற்றி எள்ளோதனம் நிவேதனம் நடக்கும். இரவு 1.30 மணிக்கு மேல் நான்காம் காலம் கற்தோகம் முதலான அபிஷேகம், நீலப்பட்டு சாத்தி, வில்வார்த்தி தீபம், சுத்தன்னம் மகாநிவேதனம் நடக்கும். இரவு 4.30 க்குள் அர்த்த ஜாமபூஜை, 4.30க்கு மேல் உஷக்காலபூஜை நடக்கும். ஏற்பாடுகளை எட்டயபுரம் சமஸ்தானத்தார் செய்து வருகின்றனர்.