நடுவீரப்பட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருப்பணிக்கான பூமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2018 02:11
நடுவீரப்பட்டு:சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிக்கான பூமி பூஜை நடந்தது.விழாவை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 9:30 மணிக்கு பூமி பூஜை நடந்தது. விழாவில் கோவில் நிர்வாகக்குழு பஞ்சாட்சரம், நடராஜன், முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், கடலூர் கணேசன் டிரேடிங் கம்பெனி பாலசுப்ரமணியன், புதுச்சேரி ராஜா, ராமலிங்கம், கடலூர் சம்பத், சைவ சித்தாந்த ரத்தினம் தட்சணாமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.