பதிவு செய்த நாள்
15
நவ
2018
02:11
செங்கல்பட்டு:மலை வையாவூரில், அம்ருதபுரி, ஸ்ரீராமானுஜ யோகவனத்தில் நேற்று (நவம்., 14ல்), மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.செங்கல்பட்டு அடுத்த, மலை வையாவூரில், அம்ருதபுரி ஸ்ரீராமானுஜ யோகவனம் அமைந்துள்ளது. சீதாராம சுவாமி மற்றும் ஸ்ரீமதி தாரா மாதா ஏற்பாட்டில், உருவாக்கப்பட்ட ஸ்ரீனிவாச நிகேதனம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில், ஏழைகளுக்கு பல சேவைகள் செய்யப்படுகின்றன.
யோகவனத்தில், ஸ்ரீநிவாசப்பெருமாள், மதுரவல்லி தாயார், ஆண்டாள், அனுமன், கருட பகவான் கோவில்கள் உள்ளன. இங்கு, கடந்த, 12ல், சிறப்பு பூஜைகளுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது.இதை முன்னிட்டு, நேற்று (நவம்., 13ல்) காலை, 6:00 மணிக்கு, கோ பூஜையுடன் சிறப்பு பூஜைகள் துவங்கின. காலை 10:30 மணிக்கு, சீதாராம சுவாமி, ஸ்ரீமதி தாரா மாதா ஆகியோர், ஸ்ரீனிவாச பெருமாள் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேக விழாவை நடத்தினர்.
மற்ற சன்னிதி கோபுரங்களுக்கு, சிவச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர்.விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ கார்யம் மற்றும் ஸ்ரீனிவாச நிகேதன் அம்ருதபுரி நிர்மாணக்குழு மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.