பதிவு செய்த நாள்
15
நவ
2018
02:11
சேலம்: வரும், 17ல், சபரிமலை சீசன் தொடங்குவதால், முக்கிய நகரங்களில் இருந்து, நாளை 16ல், முதல், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
நவ., 17ல், கார்த்திகை மாத முதல் நாளில், சபரிமலை சீசன் தொடங்குகிறது. அதை முன்னிட்டு, விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில், சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களிலிருந்து, பம்பை, குமுளிக்கு, நாளை முதல், 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. முன்பதிவை கணக்கில் கொண்டு, சென்னையிலிருந்து, 20, பிற நகரங்களில், 30 என, சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை யை, மேலும் உயர்த்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதேபோல், மதுரை, நெல்லை, கோவை கோட்டங்கள் சார்பில், முதல்கட்டமாக, 50 சிறப்பு பஸ்களை இயக்கி, கூட்டத்துக்கேற்ப அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது: பக்தர்கள், முன்பதிவு மையங்கள், தீதீதீ.tணண்tஞி.ஞிணிட் இணையதளத்தில், முன்பதிவு செய்து, டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். குழுவாக பயணிக்க விரும்புவோர், தங்கள் நகரத்திலுள்ள கிளை மேலாளர்களை தொடர்பு கொண்டால், ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். அப்போது,
அரசு விதிகளுக்குட்பட்டு, சலுகை கட்டணம் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.