பதிவு செய்த நாள்
15
நவ
2018
02:11
வாழப்பாடி: வாழப்பாடி, செல்வமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 8ல், முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. நேற்று (நவம்., 14ல்) காலை, 10:00 மணிக்கு, செல்வமாரியம்மன், விநாயகர், முருகன், காத்தவராயன், நவக்கிரகம் உள்ளிட்ட பரிவார
தெய்வங்கள், கோபுரத்துக்கு, சிவாச்சாரியார்கள், கலசங்களுக்கு புனித நீருற்றி, கும்பாபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து, பக்தர்கள் மீது, புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின், மூலவர் மற்றும்
உற்சவமூர்த்திகளுக்கு, சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.