குமாரபாளையம் அருகே, புனித செபஸ்தியார் ஆலய நேர்ந்தளிப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2018 03:11
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, புனித செபஸ்தியார் ஆலய நேர்ந்தளிப்பு விழா நடந்தது.குமாரபாளையம் அருகே, 50 ஆண்டுகள் நிறைவு காணும் சடையம்பாளையம் பழைய ஆலயம் இருந்த இடத்திலேயே, புதிய செபஸ்தியார் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் நேர்ந்தளிப்பு விழா நேற்று 14 ல்,நடந்தது. ஆலய பாதிரியார் இருதயசெல்வம் தலைமை வகித்தார். சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன், சிறப்பு பிரார்த்தனை செய்து, வழிபாடுகளை துவக்கி வைத்தார். இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பாதிரியார்கள் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்தோர் பங்கேற்றனர்.