ராமநாதபுரம் முருகன் கோயில்களில் திருக்கல்யாண கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2018 04:11
ராமநாதபுரம்: ராமநாதபுரம் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவில் திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவில் ஏழாவது நாளான நேற்று (நவம்., 14ல்) காலை 11:00 மணிக்கு முருகனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. வள்ளி தேவசேனாவுடன் மணக்கோலத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பெருவயல் இரணபலி முருகன் கோயிலில் நேற்று (நவம்., 14ல்) காலை 10:00 மணிக்கு முருகன் திருக்கல்யாணம் நடந்தது. அதன் பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.குண்டுக்கரை சுவாமி நாத சுவாமி கோயிலில் காலை 9:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுவாமி நாத சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 8:00 மணிக்கு திருமண கோலத்தில் சுவாமி வெளி இரவு வீதியுலா நடந்தது.