பதிவு செய்த நாள்
15
நவ
2018
03:11
பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே அப்புலுபாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்ம் நேற்று (நவம்., 14ல்) நடந்தது.
கோவிலை சுற்றியும் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், கருடாழ்வார், ஆஞ்சநேயர் சன்னதிகள் தனித்தனியாக எழுப்பப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக முன் மண்டபமும் கட்டப் பட்டுள்ளது. நேற்று (நவம்., 14ல்) காலை, 9:45க்கு கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீஜெகநாத பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் ஆராவமுத
தாத்தாச்சாரியார் சுவாமிகள் தலைமையில், கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, மகா நிவேதனம், ஆரத்தி, சாற்றுமுறை, தீர்த்த துளசி, சடாரி, பிரசாத வினியோகம் ஆகியன நடந்தன. பகல், 12:00க்கு மங்கள வாத்தியம், அன்னதானம், புஷ்ப அலங்காரம், பஜனை நடந்தது. 48 நாட்கள் மண்டல பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.