பதிவு செய்த நாள்
16
நவ
2018
12:11
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், முருகன், வள்ளி, தெய்வானைக்கு திருமணம் நடைபெற்றது.
செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரர் கோவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், முருகன் சன்னிதி உள்ளது. இங்கு, ஆண்டுதோறும்,
கந்த சஷ்டி விழா மற்றும் திருக்கல்யாணம் நடைபெறும்.இந்த ஆண்டு, கந்த சஷ்டி விழா, 8ம் தேதி, துவங்கி, 13ம் தேதி வரை, நடைபெற்றது. நேற்று முன்தினம் (நவம்.,14ல்) இரவு, 10:00 மணிக்கு, கந்த சஷ்டி விழா நிறைவை யொட்டி, உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானைக்கு திருமணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள், திருக்கல்யாணத்தை கண்டு பரவசம் அடைந்தனர்.
* கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில், மாமரத்து விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவில் உள்ளது.இங்கு, கந்த சஷ்டி விழா நிறைவை ஒட்டி, நேற்று முன்தினம் (நவம்., 14ல்) இரவு, 9:30 மணிக்கு, சுப்ரமணியரு க்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை, அறங்காவலர், சீனுவாசன், தலைமை அர்ச்சகர், முத்துகுமார் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தினர்.