காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் 18ல் கடை ஞாயிறு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2018 01:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், வரும் ஞாயிற்றுக்கிழமை, கடை ஞாயிறு விழா துவங்குகிறது.
கச்சபேஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் கார்த்திகை மாதம், கடை ஞாயிறு விழா நடைபெறும். 18ம் தேதி துவங்கும் இந்த விழா, நான்கு வாரங்கள் நடைபெறும்.இந்த விழாவில், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள, பல கிராம மக்கள் வேண்டுதலை நிறைவேற்ற, மண் சட்டியில் தீபம் ஏற்றி, கோவிலுக்குள் சென்று சுவாமியை வழிபடுவர்.