பதிவு செய்த நாள்
16
நவ
2018
01:11
விழுப்புரம்:திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து 22, 23ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. இந்த ரயில் காலை 10:00 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு, பகல் 12:00 மணிக்கு திருவண்ணாமலை சென்றடைகிறது.
இதேபோல், திருவண்ணாமலையில் பிற்பகல் 1:00 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2:45 மணியளவில் விழுப்புரத்தை வந்தடைகிறது.சிறப்பு ரயில்கள் அனைத்தும், வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டபள்ளம், தண்டரை ஆகிய ஊர்களில் நின்று செல்கின்றன. இதே தேதிகளில், விழுப்புரத்தில் இரவு 10:00 மணிக்கு புறப்பட்டு, 11: 40 மணிக்கு திருவண்ணாமலையை சிறப்பு ரயில் சென்றடையும். மேலும், 23,
24 தேதிகளில் அதிகாலை 4:15 மணிக்கு புறப்பட்டு, காலை 5:55 மணிக்கு விழுப்புரத்தை வந்தடைகிறது.
வேலூர் மார்க்கம்:வேலூரில்(கண்டோன்மெண்ட்) இருந்து 22, 23 தேதிகளில் இரவு 9:30 மணிக்கு புறப்பட்டு, 11:20 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடைகிறது.
இதேபோல், திருவண்ணாமலையில் இருந்து 23, 24 தேதிகளில் அதிகாலை 4:15 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 5:55 மணிக்கு, வேலூரை சென்றடைகின்றது.