பதிவு செய்த நாள்
16
நவ
2018
02:11
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ஒன்றியம், பனப்பட்டி அடுத்துள்ள பொன்னாக்காணி மாரியம்மன் கோவில், 400 ஆண்டுகள் பழமையானது. ஆண்டுக்கு ஒருமுறை கோவில் திருவிழா கோலாகலமாக நடக்கிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா, கம்பம் நடுதல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 13ம் தேதி அம்மன் அழைத்தல், கரகம் எடுத்து வருதல் உள்ளிட்ட நிகழ்வு களை தொடர்ந்து, நேற்று முன்தினம் மாவிளக்கு ஊர்வலமும், சிறப்பு பூஜையும் நடந்தது.நேற்று 15ல் மஞ்சள் நீராடல், சிறப்பு அபிஷேகத்துடன் விழா நிறைவடைந்தது. பொன்னாக்காணி மாரியம்மனை தரிசித்தால் கண்நோய், திருமண தடங்கல் மறையும், கால்நடைகள் மற்றும் பயிர் சாகுபடி மலர்ச்சி பெறும் என்ற ஐதீகம் உள்ளது. அதனால், திருவிழாவில், 18 கிராம மக்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.