சூலூர்:பொன்னாக்காணி மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.சூலூர் அடுத்த பொன்னாக்காணி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. கடந்த, 30ல் சாமி சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.
நேற்று முன்தினம் (நவம்., 14ல்) பெண்கள் மாவிளக்கு எடுத்து, பொங்கலிட்டு வழிபட்டனர். சுற்றுவட்டார கிராமங்களில், ஆயிரக்கணக்கான கிடாக்கள் வெட்டப்பட்டன. நேற்று (நவம்., 15ல்)பொன்னாக்காணி கிராமத்தில் கிடாக்கள், கோழிகள் வெட்டப்பட்டன. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.