பதிவு செய்த நாள்
17
நவ
2018
02:11
சேலம்: பூம்புகார் விற்பனை நிலையத்தில், தீப திருவிழா கண்காட்சி தொடங்கியது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, சேலம், வள்ளுவர் சிலை அருகிலுள்ள, தமிழக அரசின் பூம்புகார் விற்பனை நிலையத்தில், தீப திருவிழா கண்காட்சி நேற்று (நவம்., 16ல்) தொடங்கியது.
அதில், பித்தளை, வெண்கலத்தில் தயாரிக்கப்பட்ட, அரையடி முதல், ஆறு அடி வரையான அன்னம், பிரபை விளக்குகள், மூன்றடி வரையான மலபார் விளக்குகள், மங்கள, ரத, அஷ்டோத்ர, சங்குசக்கர தீபங்கள், குபேர தீபம், லட்சுமி, பாலாஜி, தேவி, விஷ்ணு, முருகன், நவக்கிரக விளக்குகள், அஷ்டலட்சுமி, பிரதோஷ, கிளி உள்பட பல்வேறு வகை விளக்குகள் விற்பனைக்கு உள்ளன. வரும், 30 வரை நடக்கும் கண்காட்சியில், குறைந்தபட்சம், 10 முதல், 80 ஆயிரம் ரூபாய் வரை விளக்குகள் உள்ளன. விற்பனை இலக்கு, ஐந்து லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக, பூம்புகார் மேலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.