கொடுமுடி: கொடுமுடியில், ஜோதிர்லிங்க தரிசன காட்சி தொடங்கியது. ஈரோடு பிரஜா பிதா பிரம்ம குமாரிகள், ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம் மற்றும் கொடுமுடி ராஜயோக தியான நிலையம் சார்பில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் அருகே, புது சத்திரம் மண்டபத்தில் மூன்று ஜோதிர் லிங்கங்களின் தரிசனக்காட்சி மற்றும் படவிளக்க காட்சி, நேற்று முன்தினம் (நவம்., 16ல்) தொடங்கியது. காசி விஸ்வநாதர், ராமேஸ்வரர், கேதார்நாத் ஜோதிர்லிங்கங்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்றுடன் (நவம்., 17ல்)தரிசனக் காட்சி நிறைவடைகிறது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ததாக, பிரஜா பிதா குமாரிகள் அமைப்பினர் தெரிவித்தனர்.