பதிவு செய்த நாள்
17
நவ
2018
02:11
வேலூர்: கார்த்திகை தீபம் மகா தீபம் ஏற்ற, வேலூர் ஆவினில் இருந்து, 3,500 கிலோ நெய் அனுப்பப்படுகிறது, என, ஆவின் பொது மேலாளர் கோதண்டராமன் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்தின் முக்கிய விழாவான, மகா தீபம் விழா வரும், 23 ல் நடக்கிறது. அன்று, 2,668 அடி உயரமுள்ள அண்ணமலையில் உள்ள கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றுவதற்காக, வேலூர் ஆவினில் இருந்து, ஒரு கிலோ நெய், 458 ரூபாய் விலையில், மொத்தம், 16 லட்சம் ரூபாய் மதிப்பில், 3,500 கிலோ நெய் கோவில் நிர்வாகம் வாங்கி உள்ளது. வேலூர் ஆவினில் இருந்து நெய், நாளை (இன்று), திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.