ஆர்.கே.பேட்டை:அம்மையார்குப்பம் சாந்தமலை அய்யப்ப சுவாமி கோவிலில் இன்று (நவம்., 17ல்) கார்த்திகை முதல் தேதியை ஒட்டி, லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.அம்மையார்குப்பம் கிராமத்தின் வடக்கில் அமைந்துள்ளது சாந்தமலை அய்யப்ப சுவாமி கோவில், இன்று, (நவம்., 17ல்)கார்த்திகை மாத பிறப்பை ஒட்டி, கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.காலை, 10:00 மணிக்கு, அய்யப்ப சுவாமிக்கு லட்சார்ச்சனை நடைபெறும். இதற்காக, ஒன்பது வகையான மலர்கள் பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டுள்ளன.பகல், 12:00 மணிக்கு மகா தீபாராதனை செய்யப்படுகிறது. வரும் வெள்ளிக்கிழமை மாலை கோவில் கோபுரத்தில் மகாதீபம் ஏற்றப்படும்.