பதிவு செய்த நாள்
17
நவ
2018
02:11
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், ஐந்தாம் ஆண்டு தெப்போற்சவம், நவ., 20ல் துவங்குகிறது.காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் உள்ள, இட்ட சித்தி தீர்த்தம் என, அழைக்கப்படும், தெப்பக் குளத்தில், தொடர்ந்து, மூன்று நாட்கள் நடைபெறும் தெப்போற்சவம், நவ., 20ல், மாலை, 6:00 மணிக்கு துவங்குகிறது.இதில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், சுந்தராம்பிகையுடன் கச்சபேஸ்வரர் எழுந்தருள்கிறார். முதல் நாளில், மூன்று முறையும், இரண்டாம் நாள், ஐந்து முறையும், நிறைவு நாளான, 22ல், ஏழு முறையும் தெப்பத்தில் உலா வருகிறார்.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் கச்சபேஸ்வரர் திருக்கோவில் டிரஸ்ட், காஞ்சிபுரம் நகர செங்குந்தர் மரபினர் செய்து வருகின்றனர்.