பதிவு செய்த நாள்
17
நவ
2018
02:11
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சேக்குபேட்டை, பி.எஸ்.கே., தெருவில், ருக்மணிபாய் நாயகி சமேத பாண்டுரங்க சுவாமி, லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்து, நாளை (நவம்., 18ல்) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கும்பாபிஷேகத்தை யொட்டி நேற்று (நவம்., 16ல்), புண்யாஹவாசனம் நடந்தது. இன்று (நவம்., 17ல்) விசேஷ சூக்த ஹோமம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக தினமான, நாளை (நவம்., 18ல்) காலை, 11:20 மணிக்கு, ருக்மணிபாய் நாயகி சமேத பாண்டுரங்க சுவாமிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.