மூணாறு : மூணாறு சுப்பிரமணியசுவாமி கோயிலில், பழநி தண்டாயுதபாணி கோயிலில் நடக்கும் பூஜை உட்பட ஐதீகங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.அதன்படி 31ம் ஆண்டு கந்த சஷ்டி விழா நவ. 8 ல், துவங்கியது. ஆறு நாட்களாக முருகனுக்கு லட்சார்ச்சனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.