பதிவு செய்த நாள்
17
நவ
2018
02:11
கோவை: வரும் டிச., - ஜன., மாதங்களில் சபரிமலை செல்ல கூடுதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை யாத்திரை செல்வது வழக்கம். சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சென்னை சென்ட்ரல் - கொல்லத்துக்கு கோவை மார்க்கமாக நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை சென்ட்ரல் - கொல்லம் (06047) செல்லும் சிறப்பு ரயில், டிச., 3, 5, 10, 12, 17, 19, 24, 26, 31 மற்றும் ஜன., 2, 7, 9, 14 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு, 8:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல், 12:00 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது.கொல்லம் - சென்னை சென்ட்ரல் (6048) சிறப்பு ரயில், டிச., 4, 6, 11, 13, 18, 20, 27 மற்றும் ஜன., 3, 8, 10 ஆகிய தேதிகளில், கொல்லத்தில் இருந்து பிற்பகல், 3:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 9:45 மணிக்கு சென்னை வந்தடைகிறது.
அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு உள்ளிட்ட ஸ்டேஷன்களில் நிற்கும்.சென்னை சென்ட்ரல் - கொல்லம் (06049) சிறப்பு ரயில் ஜன., 4, 18, 25 ஆகிய தேதிகளில், சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு, 8:40 மணிக்கு புறப் பட்டு, மறுநாள் பிற்பகல், 12:00 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது. கொல்லம் - சென்னை சென்ட்ரல் (06050) சிறப்பு ரயில் கொல்லத்தில், ஜன., 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் மதியம், 3:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 7:20க்கு சென்னை வருகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு, தற்போது துவங்கியுள்ளது என, தெற்கு ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.