வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 6ம் ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த, 8ம் தேதி துவங்கியது. தொடர்ந்து நடந்த விழாவில், முருகப் பெருமானுக்கு தினமும் நான்கு கால அபிஷேக, ஆராதனை நடந்தது.கடந்த, 14ம் தேதி வேல்வாங்கும் உற்சவமும், சூரசம்ஹாரமும் நடந்தது.
15ம் தேதி திருக்கல்யாணமும் நடந்தது. அன்று இரவு, அலங்கரிக்கப்பட்ட தேரில் தேவியருடன் எழுந்தருளிய சுப்ரமணியசுவாமி, நகரில் முக்கிய வீதிகளில் திருவீதி உலா சென்று அருள்பாலித்தார். விழாவுக்கான, ஏற்பாடுகளை கந்தசஷ்டி குழுவினர் செய்திருந்தனர்.